1990ஆம் வருடம். சோவியத் ரஷ்யா உடைக்கப்பட்டு ரஷ்யாவில் குழப்பமான நிலை.முன்னால் சோவியத் உளவு ஸ்தாபனம் KGB யின் ஏஜென்ட் விளாடிமிர் வேலை இன்றி தன் சொந்த ஊர் பீட்டர்ஸ்பர்க் வருகிறான். அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு பெரிய யோசனை இல்லை. காலேஜ் நாட்களில் அவனுக்கு பிடித்தனமான பேராசிரியர் அனடோலி சோப்சாக். அவர் ரஷ்யா அரசியலில் நுழைந்து கிடுகிடு வளர்ச்சியாக பீட்டர்ஸ்பர்க் மேயர் ஆக தேர்வாகியிருந்தார்சு. அவருக்கு வணக்கம் வைப்போமே என்று சோப்சாக்கை அவரது வீட்டில் சென்று சந்திக்கிறார்.
விளாடிமிரை பார்த்ததில் சோப்சாக்கு மிகுந்த சந்தோஷம். "இவ்ளோ நாள் என்னடா பண்ண. என்ன பாக்க வரலியே. படவா ராஸ்க்கல் ! "
"KGB உளவாளி.நாடு நாட சுத்தினேன்"
"போடா முட்டாள். KGBக்கு வேலை பார்த்தேன்னு இவ்ளோ ஓப்பனா சொல்ற. இடியட்"
"இதுல என்ன இருக்கு. இன்னைக்கு வேணா KGB யாருக்கும் பிடிக்காத கோஷ்டியா இருக்கலாம். ஆனா எனக்கு எல்லாத்தையும் கத்து குடுத்த இடம் அதான்."
"குட். கேள்விப்பட்டேன். ஊர்ல எந்த பொண்ணையும் விட்டு வெக்கலையாமே நீ... உன் அதிகாரி பொண்டாட்டி உட்பட. நாட்டி லிட்டில் பாய்."
சோப்சாக்ககுடன் இணைந்த விளாடிமிர், பீட்டர்ஸ்பர்க் மேயர் ஆஃபிஸில் அடிக்கடி காணப்படுகிறான். கிடுகிடு வளர்ச்சி. ஒரே வருடத்தில் முக்கிய கமிட்டிகளில் உறுப்பினர். துண்டு செய்தி - சோப்சாக்கு ஆத்துகாரி லிடமில்லா வுக்கும் வளடிமீர் ரொம்ப பிடுத்து போகிறது.
1992 - ஒரு வார கடைசி. விளாடிமிர் தனக்கு பிடித்த கராத்தே பயிற்சியில் இருந்தான்.சோபசாக்கின் உதவியாளர் அவசர அவசரமாக அய்யா அவரை பார்க்க வர சொன்னதாக சொல்கிறான்.
காரில் செல்லும் வழியில் உதவியாளன் புலம்புகிறான். "சண்டே யாரையும் அய்யா பாக்க மாட்டார். என்ன எழவோ தெரியல இன்னைக்கு காண்டுல இருக்கார்."
நமது மன்மத குட்டு தெரிந்து விட்டதோ என்ற சந்தேகத்தோடு வீட்டுக்குள் நுழைகிறான் விளாடிமிர்.
சோபசாக் ஏதோ பைலை படித்து கொண்டிருந்தார். "ஒக்காரு விளாடிமிர். என்ன குடிக்கற. பால் போதுமா இல்லை கூட பிரட் தர சொல்லட்டுமா."
விளாடிமிர் முழிக்கிறான். ஆனால் சோப்சாக் பேச்சில் ஏதோ பொறி தட்டுகிறது.
"இந்த ரிப்போர்ட் போன வருஷம் பீட்டர்ஸ்பர்க் மக்களுக்கு பால்,முட்டை,பிரட் இலவச விநியோகம் பத்தினது . ரிப்போர்ட் படி நடந்த ஊழல் 100 மில்லியன். ரிப்போர்ட் படி முதல் ஊழல் குற்றவாளி - எனது மாணவன் விளாடிமிர்."
ஒரு மணி நேரத்துக்கு பின்னர் சிரித்தபடியே ரெண்டு பெரும் வெளியே வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் சோபசாக் பாரிஸ் நகரில் மிக பெரிய வில்லா ஒன்றை வாங்குகிறார். விளாடிமிர் பெயர் ஊழல் ரிப்போர்ட்டில் இருந்து நீக்கப்படுகிறது. மாஸ்கோ கட்சி ஆபீஸ்க்கு பையன் நல்ல கெட்டிக்காரன் என்ற செய்தி போகிறது.
1997இல் பாரிஸ் வில்லாவில் போய் சோபிசெக் காலத்தை கழிக்கிறார். விளாடிமிர் மாஸ்கோ செல்கிறான். மீண்டும் அரசியலில் கிடு கிடு வளர்ச்சி. வளர்ச்சியின் உச்சகட்ட மாக 2000 இல் ரஷ்ய ப்ரெசிடெண்ட்.
இப்படிபட்ட விளாடிமிர் புடின் உடன் டொனால்ட் டிரம்ப் கூட்டு சேருவது இயல்பு தான். இனம் இனத்துடன் சேரும்.சேரும் சகதியாகி போகும்.
பின்னால் சேர்க்கப்பட்ட முன் குறிப்பு: போட்டோ வில் இருக்கும் அம்மணி - லிடமில்லா.
No comments:
Post a Comment