சமீபத்தில் ஒரு திரை பாடல் பலரை பித்துப்பிடித்து , கிறங்கடித்து, லூசாக்கி விட்டுருக்கிறது. இந்த பதிவு "என்னோடு நீ இருந்தால்" பற்றியது.
"என்னோடு நீ இருந்தால்" பாடல் பற்றி சிலாகிப்பதற்கு முன்னால், டான் ப்ளாக் (Don Black) ரஹ்மான் பற்றி கூறியதை பார்த்தாக வேண்டும். ரஹ்மான் இசை அமைப்பு முறையை பற்றிய மிகச் சரியான விவரிப்பாக எனக்கு இதுபட்டது. டான் ப்ளாக் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. ஆஸ்கார் விருது பெற்ற பாடல் எழுத்தாளர். 1967ஆம் ஆண்டு Born Free படத்திற்கு சிறந்த பாடலாசிரியர் ஆஸ்கார் வென்றவர்.
டான் ப்ளாக்கின் ரஹ்மான் இசை அமைப்பு முறை பற்றிய வர்ணனை இவ்வாறாக அமையும்.
"ரஹ்மான் கையால்வது போன்ற ஒரு இசை அமைப்பு முறையை அதற்கு முன் நான் பார்த்தது இல்லை. அவர் ஸ்டூடியோவில் நுழைவதற்கு முன்னால் செருப்பை வெளியே கழட்டிவிட வேண்டும். ஸ்டூடியோ அறையில் எப்பொழுதும் ஒரு மெழுகு எறிந்து கொண்டிருக்கும். பிரமாதமான ஒரு இசை கோர்வை அமைந்து கொண்டிருக்கும் போதே திடீரென்று ஸ்டூடியோ அறையை விட்டு வெளியே செல்வார்.திரும்ப வரும் பொழுது, சிரித்து கொண்டே தொழுகையில் ஈடுபட்டதாக சொல்வார்.
மேல் சொன்ன வர்ணனை ரஹ்மான் பற்றி ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது போன்ற eccentrics எல்லா இசை அமைப்பாளர்களிடமும் உண்டு. இதற்கு அடுத்து டான் ப்ளாக் சொல்லும் விஷயம் தான் ரஹ்மான் இசை அமைப்பை நெற்றியடியாக விவரிக்கும்.
"ஒவ்வொரு பாடல் இயற்ற நாங்கள் சந்தித்த போதும் அவருடைய எண்ண ஓட்டம் ஏதேனும் ஒரு ஒற்றை புள்ளியை நோக்கியே செல்லும். அந்த ஒற்றை புள்ளியானது ஒரு வார்த்தையாகவோ, வரியாகவோ இருக்கும். அந்த ஒற்றை புள்ளியின் மேல் அவர் மெனக்கெட ஆரம்பிப்பார். கீபோர்டில் அந்த ஒற்றை புள்ளியை முனகிக் கொண்டே விளையாடுவார்."
ரஹ்மான் கீபோர்டில் விளையாடி கொண்டே முனகும் பிம்பத்தோடு மேலும் படியுங்கள்.
"ரஹ்மான் எந்த ஒரு புற சூழ் நிலையும் அவரை பாதிக்க விடமாட்டார். அவரை பொறுத்த வரை It has to happen.ரெக்கார்டிங் செஷன் ஒன்றிற்கு நாற்பது வயிலின் கலைஞர்களை அழைத்து விட்டு அவர்களுக்கு வாசிக்க ஒரு நோட் கூட இல்லாத சூழ் நிலையை ரஹ்மானோடு நான் சந்தித்தேன். ஆனால் அந்த ஒற்றை வரி முனகலில் ஆரம்பித்து 30 நிமிடங்களில் 40 வயலின்கள் முழங்க அற்புதமான ஒரு இசை கோர்வையை இசைத்து காட்டினார்."
மேல் சொன்ன விவரணை உங்களுக்கு புரிந்தால் ரஹ்மான் இசை உங்களுக்கு இன்னும் நன்றாக புரிய ஆரம்பிக்கும்.
- சின்ன சின்ன ஆசையின் interludeல் வரும் ஏலேலோ ஹம்மிங்
- டேக் இட் ஈசி ஊர்வசி தொடக்கத்தில் வரும் மறுகபா ஹம்மிங்
போன்றவை வெறும் ஹம்மிங் இல்லை. ரஹ்மான் இசை அமைப்பு முறையின் சுவடுகள். இது போன்ற ஒற்றை வரியை எடுத்து கொண்டு அதன் மீது improvise செய்வது ஹிந்துஸ்தானி,சுபி இசை அமைப்புகளில் பிரபலம். ஹரிஹரன் ரஹ்மான் பாடல்களில் ஸ்பெஷலாக இருப்பதற்கு காரணமும் இதுதான். Rahman's music has hell lot of space to improvise.
இப்பொழுது "என்னோடு நீ இருந்தால்" பாடலை இன்னொரு முறை கேட்டு பாருங்கள். ரஹ்மான் கீபோர்ட முன் அமர்ந்து புலம்புவது போன்ற பிம்பம் விரிகின்றதா ?
"என்னோடு நீ இருந்தால்" ஜாஸ் (jazz) இசை சார்த்து. ஜாஸ் இசை அமைதி அற்ற நிலையை விளக்க பெரிதாக பயன்படுமாம். "Jazz is restless. It won't stay put and it never will." Jazz,Reggae,Irish-folk ஆகியவை தனக்கு பிடித்தவை என்று ரஹ்மான் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இன்பாக்ட் "சின்ன சின்ன ஆசை" பாடலில் ரெக்கே இசை சாயல் உண்டாம்.
"என்னோடு" பாடலை கேட்கையில் இருள், வலி, அமைதி அற்ற நிலை இவை கொண்டு ஒருவன் பாடும் புலம்பலாக பட்டது. "என்னோடு நீ இருந்தால்" என்ற ஒற்றை புள்ளியில் சிட் ஸ்ரீராம் மறுகி உருகி பாடியிருக்கிறார். "தம்பி சிட்! பீர் சிகரட்னு கெட்ட பழக்கம் பக்கம் போய் குரலை உட்றாத. You have a magic in it, unlike anything else."
ஆனால் பாடலில் எனக்கொரு மிகப்பெரிய குறை. சத்தியமா ஒரு வரி கூட தெளிவா புரியல. ஒரு பீலிங் கொண்டு வர வேணும்னே செய்ததா என்னேனு புரியல. ஆனா இதே மாறி போனா நிச்சயமா தமிழ் இனி மெல்ல சாகும்.
கபிலன் எழுதிய பாடல் வரிகளை தேடித் படித்தேன். Nothing special in it. இருளுக்கும் வெளிச்சதிற்குமான ஒரு சண்டையை,வலியை பெரிதாக வரிகள் உணர்த்தவில்லை. நான் ஒரு வைரமுத்து வெறியன் என்பதனால் அப்படி பட்டதோ ? Anyways, its personal preference.
"என்னோடு நீ இருந்தால்" ரஹ்மான் என்ற ராட்சதனின் அசுர புலம்பல். காலத்திற்கும் ஒலிக்கும்.
No comments:
Post a Comment