Monday, July 21, 2014

லார்ட்ஸ்: இந்திய-இங்கிலாந்த் இரண்டாவது டெஸ்ட் - நான்காம் பார்வை


லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு விசேஷ பின்பற்றுதல் உண்டு. அன்றைய ஆட்ட தொடக்கத்தை யாரேனும் ஒரு பெரிய மனுஷர் மணி அடித்து தொடங்கி வைப்பார். நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்தது சாட்ஷாத் நமது கபில்தேவ். இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே ஒரு உற்சாக டானிக்.

விஜய்-தோனி மட்டை ஜோடி களம் இறங்கியது. நேற்றைய தினமே தோனி மயிரியழில் உயிர் தப்பி இருந்தார்.ரொம்ப நேரம் தாக்கு பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்கவில்லை. எதிர்பார்த்தபடியே தட்டி தடவி ஆடி, ஒரு வழியாக சிலிப் கேட்ச் குடுத்து வெளியேறினார். புது பந்தை எடுக்க இன்னும் ஏழு ஓவர் பாக்கி. "முடிஞ்சா எதாவது பண்ணு" என்ற ரீதியில் மொயின் அலிக்கு பந்து வீச பணித்தார் குக். அங்கதான் அவருக்கு அடிச்சுது பம்பர் லாட்டிரி. ஒத்த ரன் கூட அடிக்காத நிலையில் ராஜர் பின்னி "அடிக்கறேண்டா உன்னை பிண்ணி"  என்று அடிக்க போக மிட்-ஆப்ல் கேட்ச். இது அநேகமாக இந்த பயணத்தில் பின்னியின் கடைசி ஆட்டமாக அமையும். I will be happy if Binny proves us wrong !

இந்தியாவை கரையேற்றும் பொறுப்பு முழுவதும் விஜய்-ஜடேஜா ஜோடி மீது விழுந்தது. இருவருமே அக்னி நட்சத்திரம் கார்த்திக்-பிரபு ரீதியில் ஆரம்பித்தனர். ஆம் ! ஜடேஜா அழைத்த ரன்னிற்கு மறுத்த விஜய்; சரமாரியாக விலாச முயன்ற ஜடேஜாவை கண்டித்த விஜய்; இருவருமே வெளிப்டையாக கடுப்பை வெளிக்காட்டினர் ! North meets South ! இன்னைக்கு வெளங்கின மாறி தான் என்று தோன்றியது. அங்க தான் ஒரு அற்புத திருப்பம். இந்த ஜோடி இணைந்து ஆடியது 6 ஓவர்களே ஆனாலும் அதன் பாதிப்பு அதை கடந்தது. விஜய் தனக்கே உரிய நேர்த்தியான ஆட்டத்தை தொடர்ந்தார். மறுபுறம் சரமாரியாக விலாசினார் ஜட்டு. சிரித்த முகமாக இருந்த குக் சற்றே  முறைக்க தொடங்கினார். லார்ட்ஸ் பால்கனியில் இருந்து தோனி சற்றே அமைதி ஆனார். (அவரு என்னைக்கு டென்ஷன் ஆனார்!)

இங்கேதான்  விஜய்யின் பழைய கெட்ட பழக்கம் அவரை வழுக்கிவிட்டது. ஆப் ஸ்டம்ப் வெளியே பாலை தேமேயென நல்ல பிள்ளையாக விட்டுக்கொண்டிருந்தவர் , திடிரென தேவையில்லாமல் மட்டை கொடுத்து மாட்டிக்கொண்டார். துள்ளி குதித்தார் அண்டர்சன் ! லார்ட்ஸ் சதத்தை தவற விட்டார் விஜய் ! A beautifully poised partnership was cut short brutally !

235/7. தலைக்கு மேலே வெள்ளம் போயாச்சு - இனி அதிரடி தான் ஒரே வழி என்று ஆட தொடங்கினார் ஜட்டு. சும்மா சொல்லக்கூடாது  மனிஷன் இங்கிலாந்த் பந்து வீச்சாளர்கள் கண்ணில் விரலை உட்டு ஆட்டிட்டார். உங்கூட்டு அடி எங்கூட்டடி இல்ல - மரண அடி. பிராடை தலைக்கு மேலே ஒரு சாத்து - அண்டர்சன்னை எறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவர் நோக்கி ஒரு மொத்து என்று பிரமாத படுத்தினார். இங்கிலாந்த் அணிக்கு கண்ணில் பொறி தட்டியது. இதனாலேயே என்னோவா, புவனேஸ்வர் குமார் கொடுத்த வாய்ப்பை, சிலிப்பில் அலேக்காக தவற விட்டார் ரூட். இந்தியாவின் அப்போதைய நிலை 246/7. A crucial lapse in the most crucial juncture of the game !

பிராட் புது பந்தை சரியாக பயன்படுத்துகிறாரா என்ற கேள்வி எல்லார் மனதிலும். ஸ்டோக்ஸ் அடிக்கடி ஆடுகளத்திலிருந்து மாயமாக மறைந்தார்.
தெம்பாக தொடர்ந்த இந்திய ஜோடி, இங்கிலாந்த் அணியின் இந்த பிரச்சனைகளை பூதாகாரபடுத்தியது. மூன்றாவது ஆட்டத்திற்கு இதே இங்கிலாந்த் அணி தொடருமா என்பது சந்தேகம் ! விடிவெள்ளியாக பிளாங்கெட் நன்றாகவே பந்து வீசினார். ஜட்டு அரை சதத்தை 42 பந்துகளில் அடித்து தூள் செய்தார். மறுமுனையில் குமார் சூடுபிடிக்க, இந்தியாவின் லீட் 300ஐ தாண்டியது. Mission accomplished for India !

இங்கிலாந்தை நொந்து நூடில்ஸ் ஆக்கிய பின்னர் ஜட்டு 68 ரன்னிற்கு அவுட். Perhaps the finest innings of Jaddu's career so far ! கலக்கிட்டீங்க சர் ஜட்டு. திரும்பி பார்பதற்குள் குமாரும் 50 அடித்திருந்தார். ஒரு வழியாக 318 ரன் முன்னிலையில் ஆட்டம் இழந்தது இந்தியா. அழகிய எண் விளையாட்டு - இங்கிலாந்த் முதல் இன்னிங்க்சில் எடுத்த ரன்கள் 319.

150 ஓவர்களில் - 319 ரன்கள் இலக்கு - 2.2 ஓவருக்கு/ரன் சராசரி - அப்பப்போ எகுரும் பந்து - 5ஆம் நாள் ஆட்டத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - குமாரின் பந்து வீச்சை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா - கடைசி ஆள் வரை திறமையான மட்டையாலர்கள் - வெற்றி யார் பக்கம் - Looks like a very complex equation என்று சுவாரஸ்யமாக தொடங்கியது நான்காம் இன்னிங்க்ஸ்.

இங்கிலாந்தின் முதல் இலக்கு - 8 ஓவர் - தேநீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல்இருப்பது. குமார்-ஷாமி பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. 6வது ஓவர் புது பந்தில் வீச வந்தார் ஜட்டு. முதல் பந்து - நேராக ஆப் ஸ்டம்ப் நோக்கி - Padஐ துருத்தி ஆடிய ராபின்சன் தனக்கே பாடை கட்டிக் கொண்டார். LBW - 12/1.

தேநீர் இடைவேளைக்கு பின் ஜட்டுவின் சுழல் பந்தை ஆட ரொம்பவே தடுமாறினர். ஆனால் சீக்கரமே சுதாரித்து கொண்டது குக்-பாலன்ஸ் ஜோடி. இஷாந்த் ஷர்மா ஒரு சில லட்டு பால்கலை போட்டு அவர்களை ஆசுவாசபடுத்தினார். தோனியின் எந்த பாச்சாவும் பலிக்கவில்லை - 50 ரன்களை தொட்டது இங்கிலாந்த். குக் நன்றாகவே ஆடத் தொடங்கினார். கடைசியாக மனம் வந்த தோனி,  செல்லபிள்ளை ஜட்டுவிடமிருந்து பாலை பிடுங்கி ஷாமிக்கு  குடுத்தார். கை மேல் பலன். முதல் பந்திலேயே பாலன்ஸ், வெளியே போன பந்தை நக்கி அவுட் ஆனார். (தமிழில் nick என்பதற்கு நக்குதல் பொருத்தமான வார்த்தை தானே ?). இதோ வந்துட்டேன் என்று சிலிர்த்தெழுந்த இஷாந்த் லாவகமாக பந்தை உள்ளே கொண்டு வர ஆப் ஸ்டம்ப் இழந்தார் பெல். அரௌண்ட் விக்கெட் வந்து ஆப் ஸ்டம்பில் குத்தி நேராக்கிய பந்தை சமாளிக்க முடியாமல் வெளியேறினார் குக். 72/4.சொற்ப ஓவர்களை ரூட்-மொயின் அலி ஜோடி ஒரு வழியாக ஆடி முடித்து.105/4.

இங்கிலாந்த் 5ஆம் நாள் ஆட்டத்தில் தப்பிப் பிழைப்பது தெய்வாதீனம் ! வருண பகவான் கை குடுக்கலாம். கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா வென்றது 1986ல். அந்த மாட்சில் ஆட்ட நாயகன் கபில்தேவ். அந்த கபில்தேவ் மணி அடித்த நேரம் இந்தியா லார்ட்சில் அடுத்த வெற்றியை எட்டும் என்றே தோன்றுகிறது.

கடைசியில் அதிங்கபிரசங்கி தனமாக இந்த பாட்டை இந்திய அணிக்கு அர்பணிக்கிறேன் !


No comments:

Post a Comment

Pages