1995 ரஹ்மானின் இசை பயணத்தில் பெஸ்ட் இயர் - பம்பாய், ரங்கீலா,இந்திரா, முத்து என வரிசையாக சூப்பர் ஹிட் ஆல்பம்ஸ்.
இளையராஜாவின் அறையில் எப்போதும் போல அமைதி.ஆனால் கங்கை அமரன் மட்டும் கோபத்தின் உச்சத்தில். "அண்ணேன் ! உங்களுக்கு ஏன் இந்த அல்ப புத்தி. நான் கஷ்டப்பட்டு பாக்யராஜ தாஜா பண்ணி அவன் படத்துல மியூசிக் பண்ண சான்ஸ் வாங்கினேன். இப்ப என்னடானா - அமர் நீ மியூசிக் பண்ணல. உங்க நோன்னேன் பண்ணட்டும் அப்படிங்கிறான்."
அறையின் ஓரத்தில் பாக்யராஜ் வெள்ளை கற்சிப்பில் கழுத்தை துடைத்து கொல்கிறார்.
"அப்படியே அந்த கற்சிப்ப குடு. தலையில போட்டுக்கறேன்."
மீண்டும் அறையில் அமைதி.
கடைசியாக இளையராஜா ஒரு முடிவுக்கு வருகிறார். "அமர். உனக்கு ஒழுங்கா பண்ண தெரிஞ்சது பாட்டு எழுதறது. இந்த படத்துல எல்லா பாட்டையும் நீயே எழுது." வந்த வரைக்கும் லாபம் என்று கங்கை அமரன் மண்டை ஆட்டுகிறார்.
படத்தில் எல்லாமே மாற்றி அமைக்கப் படுகிறது. ஹீரோயினியாக ஒப்பந்தம் ஆகியிருந்த ஸ்ரீதேவிக்கு பதில் மீனா ஹீரோயினி ஆகிறார். பாடல்களின் சவுண்ட் டிசைனில் கார்த்திக் ராஜா பெரும் பங்கு உண்டு. படத்தின் பெயர் - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி.
படத்தில் வரும் இந்த பாடல் ராஜாவின் சவுண்ட் டிசைனில் இருந்து மிகவும் மாறுபட்டிருக்கும். டிம்பணி டிரம்ஸ் சவுண்ட் தூக்கலாக இருக்கும்.பாஸ் பாட்டேர்ன்ஸ் ஸிந்தசைஸிர் விளையாடும். பாலசுப்ரமணியம் - சித்ரா பாடவில்லை.மாறாக, மல்டி வாய்ஸ் இருக்கும்.முக்கிய இடங்களை மனோ-மின்மினி பாடியிருப்பர். Fillers இல் அருண்மொழி, S.N. சுரேந்தர், லேகா,தேவி பாடியிருப்பர். (என்னடா ரஹ்மான் டைப்ல இருக்கேனு யோசிக்க தோணும்.)
ஆனா ஒண்ணு. படத்துல எல்லாத்தையும் மாத்தினாலும் பாக்யராஜோட டான்ஸ மாட்டும்... இம்ம்ம்ஹும்ம்...
No comments:
Post a Comment