Saturday, March 29, 2014

பதினெட்டாம் கொலை



பயம் ! மனிதனுக்கு படைக்கப்பட்ட முக்கியமான உளவியல் கூறு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொலைகாரன்,காமுகன்,இனவெறியன் ஒளிந்திருக்கிறான். பயம் என்ற உளவியல் போர்வை விலகும் பொழுது அவன் வெளிப்படுகிறான். பயம் இல்லா உலகம் கொடும்பாவிகள் உலவும் நந்தவனமாக மாறும்.இந்த சித்தாந்தங்களை யோசிக்கவோ,போதிக்கவோ நான் ஒன்றும்  ஞானி அன்று. இதுவரை பதினேழு கொலைகள் செய்த சாதாரண நந்தவனத்தில் உலவும் ஒரு கொடும்பாவி. 

"எல்லாம் ரெடியா ?"

"பக்கா ப்லான்னிங்கு. எட்டற மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு கெலம்புவன். ஒம்போது மணிவாக்ள தேனாம்பேட்டை சிக்னல் தாண்டி டீ கடை. டெய்லி நிப்பாட்டி தம் போடுவான். ஊர்கதை உலககதைனு அரைமணி  நேரமாவது  பேசுவான். நம்ம பய அதுக்குள்ள பைக்ல பெட்ரோல எடுத்துறுவான்."

"பார்ட்டி உசாரு ! சந்தேகம் வராம பண்ணனும்."

"அத பத்தி நீ கவலை படாத. நம்ம பையன் சம உசாரு. வண்டில வண்ணன்தோப்பு முக்கு வரைக்கும் போறதுக்கு பெட்ரோல் இருக்கும். அங்க வெச்சு நீ அவன போட்ரு."

கூலிக் கொலையாளிகள் கூட்டத்தில் இரண்டு விதமான நுட்பங்கள் தேவை. ஒன்று - ஒரு நபரை தொடர்ந்து சென்று அவரை கவனித்தால்,அவரது பலவினங்கள் அளவிடுதல், கொலை செய்ய சரியான இடம்,பொருள்,ஏவல்  ஆகியன திட்டமிடுதல். இதற்கு சிறிது புத்தி கூர்மையும் நிதானமும்
தேவைபடுகிறது. ஆனால் இறுதியான 'கொலை' என்ற உச்சகட்ட வன்ம செயலுக்கு மிகபெரிய ஒரு முட்டாள் தனம் தேவை. அதனால்தானோ என்னவோ இன்றுவறையில் கொலை செய்வதற்கு எனக்கு சொற்ப பணமே தரப்படுகிறது 

"பார்ட்டிக்கு எவ்ளோ வயசு இருக்கும்." என் கையில் ஒரு போட்டோவை கொடுத்துவிட்டு நகர்ந்தான். அதில் சுமார் நாற்பது வயது ஒத்த  ஒரு சாமானியன் சிரித்து  கொண்டிருந்தான்.

அன்று தனது சராசரி அரை மணிநேரம் தாண்டியும் யாருடனோ எதையோ சுவாரஸ்யமாக பேசிகொண்டிருந்தான். கடைசியாக தெரு நாய்க்கு ஒரு பிஸ்கட் துண்டை வீசி விட்டு பைக்கை செலுத்தினான். நானும் சிறிது தொலைவில் பைக்கை பின்தொடர்ந்தேன். வண்ணாந்தோப்பு  சந்து நெருங்கியது. இங்கு எங்கேனும் தான் வண்டி பெட்ரோல் வற்றி நிற்கவேண்டும். பைக் நிதானமான வேகத்தில் சென்று கொண்டே இருண்டது. அவன் வீடு சேரும் வரை.

"பைக்க லேம்ப் போஸ்ட் கீழ நிப்பாட்டி இருக்கான் . வண்டிய அங்க வெச்சு தொடறது  ரிஸ்க்குன்னு பையன்  திரும்ப வந்திட்டான். உடு! இன்னைக்கு இல்லேனா  நாளைக்கு சிக்கிடுவான். நீ ஆபீசிக்கு போய்  உன் அமௌண்ட வாங்கிக்க. அப்பரும்  கூப்பிடறேன்" செல்போன் குரல் 
அமைதயுற்றது. 

திரும்பி செல்கையில் எதிர்பாராமல் வண்டி நகர மறுத்து நின்றது. தூரத்தில் யாரோ நடந்து வருவது தெரிந்தது. அருகில் வந்தபோது தெரிந்தது - போடோவில் பார்த்த நாற்பது வயது சாமான்யன். லுங்கிக்கு மாறியிருந்தார். பேண்டில் மறைத்திருந்த தொப்பை, லுங்கியில் மறைய மறுத்து வெளிப்பட்டது. 

"என்ன தம்பி. வண்டில பெட்ரோல் இல்லையா."

மெளனமாக அவரை பார்த்தேன்.

"நைட்ல இந்த ஏரியால பங்க் எதுவும் தொரந்திருக்காதே.ஒண்ணு  பண்ணுங்க. நம்ம வீடு இங்கேர்ந்து பக்கம் தான். வண்டிய இங்கயே போட்டு  வாங்க. வீட்ல நம்ம வண்டி நிக்குது. அதல பெட்ரோல் எடுத்து பாட்டில்ல புடிச்சுகோங்க ."

இருவரும் வீடு நோக்கி நடக்கையில் கேட்டார் "தம்பிக்கு என்ன வேலை ".


Thursday, March 13, 2014

Czechoslovakia காதல்


நாம எவ்ளோவோ மூஞ்சிகள பாக்கறோம். அழு மூஞ்சி,கோண மூக்கு மூஞ்சி, கண்ணாடி போட்ட மூஞ்சி,சுமார்  மூஞ்சினு. ஆனா அழகான மூஞ்சினா  அதாங்க. பாத்த first வாட்டியே மிடில் ஸ்டம்ப் கிளீன் போல்டு.

"டேய் நாயே ! நடு ரோட்ல நின்னு கனவு கண்டுகினு இருக்கியா . வண்டிய எட்றா !"

நம்ம ஏதோ ஒரு பீலிங்க்ல இருக்கும் போது உள்ள பூந்து நாஸ்தி பண்றதுக்கே சில நாய்ங்க வாரும்.   அவன திரும்பி பாத்து மாமூலான மொரப்ப காமிச்சிட்டு , "வண்டிய எடுபோம்ல . என்ன அவசொரம் !". வண்டிய எடுத்தேன்.

அந்த டி கடேல தம்மு வாங்கிட்டு கதைய கண்டிநியு பண்றேன்...

 Czechoslovakia. படிக்கவே எவ்ளோ கஷ்டமா இருக்குல. மொதோவாட்டி கேட்டப்போ சத்தியமா அந்த ஊரு எங்க இருக்குனே தெர்லேனேன் . பொறுமையா  அவங்க ஊர் பத்தி சொன்னங்க . எனகொன்னும் மண்டெல ஏர்ல . ஆனா ஒரு விஷ்யம் மட்டும் தெளிவா புரிஞ்சிச்சு. அவங்க ஊர்ல பிகர் கூட்டம் அள்ளும் .  ஏன்னா , நம்மாளு அவ்ளோ அலகு.

மொதோ தம்மு முடிய முடிய அடுத்தத பத்த வைக்கணும். அப்பதான் ஒரு ப்லொவ் வரும். "பாஸ்... லைட்டர்  இருக்கா."

என்னா ரசனயான பொண்ணுப்பா. நாம ஊரு டி கடையில அவ்ளோ ரசனைய யாரும் டி குடிச்சு நான் பாத்தது இல்ல.வாழ்கைய இஞ்சு இஞ்சா ரசிப்பா. ஒரு நாள் கேட்டேன்,"உங்க ஊர்ல இதுலாம் இல்லையா.எத பாத்தாலும் ஓவரா பீல் பண்ற ".

ஏதோ ஒண்ணு இங்கிலிஷ்ல சொன்னா. கூட்டி கொறச்சு பாத்தா அதோட தமிழ் translation ," எங்க ஊர்ல நீ இல்லையே !".

மூணு மாசம் ஒடிச்சு. ப்ரெண்ட்ஷிபா,லவ்வா  என்ன எழவுன்னெ தெரியாம ஒடிச்சு. திடிர்னு ஒரு நாள், "Come with me to my county"னா.

ஹோட்டல்ல ஒரு வடைக்கு மட்டும் டோக்கன் வாங்கிட்டு ஒக்காரும் போது, சர்வர் எவனுக்கோ போக வேண்டிய காப்பிய நம்ம டேபிள்ல வெச்சதும் கூச்ச படாம குடிச்சிட்டு வர கோஷ்டி  தான். இருந்தாலும் மனசு ஏதோ சொல்லிச்சு. உனுக்கு இந்த தேனாம்பேட்ட தான் சரின்னு."Madam ! No ! Me happy only in Tenampet ! Me no coming !"

அவ ஊருக்கு போற வரைக்கும் அத பத்தி பேசவே இல்ல. ஆனா ஏர்போர்ட்ல வெச்சு தாங்க முடியாம கேட்டேபுட்டேன், " Can I kiss you !".

ஒரு அஞ்சு செகண்ட் அவ ஒண்ணுமே சொல்லல. அப்பரும் என்ன நெனச்சலோ தெரியல. அடிச்சா பாருங்க ஒரு லிப் கிஸ்ஸு ! சாமி !

ஆறு மாசம் அப்டியே சுத்திகிட்டு இருந்தேன்.  அப்பப்ப தோணும். அவ கூட அவ ஊருக்கே போயிருகனும்னு.  ஒவ்வரு நாலும்  தூங்க கண்ண  மூடும் போதும் அவ மூஞ்சு கண்ல வரும்.

எவ்ளோ நாள் தான் அப்டியே இருக்கறது. வீட்ல ஒரு பொண்ணு பாத்தாங்க. எல்லாமே கட கடன்னு முடிஞ்சிடிச்சு. பர்ஸ்ட்  நைட் - பிரண்ட்ஸ்லாம் பயங்கரமா பச்சை பச்சையா கலாய்கறாங்க. ஆனா எனக்கு மட்டும் ஏதோ ஒரு மாதிரி இருந்திச்சு. கவித தெரிஞ்ச பிரண்டு ஒருத்தர் சொன்னாரு, " உதடுகள் பிரிந்தாலும், எச்சில் இன்னும் காயவில்லை".

எப்டி சொன்னேன்லாம் ஞாபகம் இல்ல. ஆனா அன்னைக்கே ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த கதைய அப்டியெ  detail மாறாம அவள்ட சொல்லிட்டேன். என்ன சொல்லுவாலோனு கீழ குனிஞ்சு உக்காந்திருந்தேன்.

அவ ரொம்ப சிம்ப்ளா,
 "நாளைக்கு காலைல பேசிக்கலாமா" னு படுத்து தூங்கிட்டா.

எப்டி எப்டியோ react பண்ணுவான்னு யோசிச்சேன். ஆனா இப்டி ஒரு reaction சத்தியமா யோசிக்கல.

பாத்திங்களா. என் கதைய  சொல்ல சொல்ல அந்த தேனம்பேட்ட சிக்னல்ல ஏன் நின்னுகிட்டு இருந்தேன்னு சொல்ல மறன்டேன். ஒன்ற வரசத்துக்கு  அப்புறம் நம்ம madam ஊருக்கு வந்திருக்காங்க. எப்டியோ நம்ம phone  number கண்டுபுட்ச்சி பேசிச்சு. என்னனமோ பேசிச்சு. கடைசியா, "I want to see you" னுச்சு.

பாக்கறதுக்கு மேடம் இன்னும் அப்டியேதான் இருந்தாங்க. நான் தான் ரொம்ப கருத்து போய்டேன்னு பீல் பண்ணாங்க. கலம்பர நேரத்தல கேட்டாங்க,"Can I kiss you ".

யோசிக்காம சொன்னேன், "No madam. I marry man. One life. one wife.போனா  வாட்டி அடிச்சா கிஸ் ஈரமே இன்னும் காயல...

...அப்புறோம் ... இனிமே  சென்னை வந்திங்கனா தயவு எனக்கு செஞ்சி என்ன பாக்கதீங்க. Happy Journey."

போடாங்க முட்டா டேஷ்னு நீங்க சொல்றது காதுல உழுவுது. ஆனா என்னவோங்க. இந்த மனசு சொல்லுது. இந்த தேனம்பேட்ட தான் நமக்கு சரின்னு.

இந்த பீலிங்கோட தான் சிக்னல்ல நின்னுட்டு இருந்தேன். அந்த பாடு ஹோர்ன் அடிச்சு காண்டு பண்ணிட்டான். விடுங்க. அவனுக்கு என்ன பீலிங்கோ !

அன்னக்கி first  night கு அப்றோம்  நம்ம wife  மேல ஒரு பயங்கரமான லவ் வந்திருச்சுங்க. காலைல எந்திருச்சு பாக்கும் போது ரூம்ல அவங்க இல்ல. வெளிய வந்தா வீட்ல எல்லாரும் அழுதிட்டு இருக்காங்க. அன்னைக்கு சாயங்காலம் வக்கீல் நோட்டீஸ் வந்துச்சு. டைவோர்ஸ் கேட்டு. ஆனா சத்தியமா அவங்க மேல கோவம் வர்லேங்க. பாஸ்... லவ் பண்றவங்க மேல எப்டி பாஸ் கோவம் வரும்.

ஒரு வருஷமா அவங்க என்ன புரிஞ்சு பாங்கனு வெயிட் பண்றேன். புரிஞ்சுபாங்க. என்ன கொஞ்சம் லேட் ஆவுது. அவ்ளோ தான். எல்லோரும் பொண்டாட்டிய பர்ஸ்ல போட்டாவா வெச்சு லவ் பண்றான். நான் மனசுல வெச்சி லவ் பண்றேன் பாஸ் ...


Pages