(கிரிக்கெட்டில் பொதிந்துள்ள ஹிந்துத்வம்) |
இந்த தலைப்பை படித்தவுடன் அமாவாசைக்கும் அப்துல்காதற்கும் என்ன தொடர்பு என்றோ, கருணாநிதிக்கும் இலங்கை தமிழர்க்கும் என்ன தொடர்பு என்றோ நீங்கள் நினைப்பது என் மணக்கண் முன்னே விரிகிறது. என் அய்யன் பாரதியை கூட பார்ப்பான் கவிழன் என்று பிதற்றிய சமூகத்தில் மேற்சொன்ன உயர்கருப்பொருள் பால் துவேஷம் கொள்வதில் வியப்பில்லை. எனினும் மறைபொருளை உருபொருளாக வெளிச்சத்திற்கு கொணர்வது இக்கடுரையாலனின் தார்மீக பொருப்பே என்பதையும் உணர்வேன்.
கிரிக்கெட்டில் பொதிந்துள்ள ஹிந்துத்வம் சார் கருத்துக்களை விளம்புவதே இக்கட்டுரையின் நோக்கு. சரி, ஹிந்துத்வம் ஆழ்பொருலானது யாது என்று பல்அறி ஞர்களும் தளும்பும் அளவு விளம்பியதன் சாரம் - "உடல் என்னும் காயத்துல் உயிர் எனும் உயர் பொருள் ஆட்கொண்டு சிந்தனை என்னும் விசையால் சித்தம் நோக்கி பயணிப்பதே". சுபி அறி மக்களும் "வாழ்கை என்பது ஒரு பயணம். இலக்கன்றேல் !" என்று கூறியதன் உட்பொருள் இதுவோ என்று உங்களுக்கு வியப்பு எற்படவில்லையேல் மீண்டும் மேற்சொன் வாக்கியத்தை படித்து அக கலிப்படைவீர். இதை எழுதும் பொது சாஸ்வதமாக "நான் எழுதுவது எனக்கே புரியவில்லையே" என்று என் எழுத்து குறியோன் தயங்கி நிற்க.
எதையும் இலகுவாக்குவதற்கு பாட்டை கைகொள்வது தமிழர் மறை. ராஜா அவர்கள் "பாட்டாலே புத்தி சொன்னான்" என்றார். ஆகவே ஹிந்துத்வத்தின் சாரத்தை லகு உரைக்க இங்கொரு வெண்பா இயற்றுதல் தவிர்க்க முடியாதது.
காயத்தின் ஊடதே கபாலம் தன்வாயிலே
தற்பொருள் உயிருனும் ஆண்டதே - சிந்தனையின்
விசை கொண்டு பெரும்கடலாம் வாழ்விதனை
சித்தம் எய்தவே கடதல்.
திருக்குவளை சேர்ந்த நடேசன், மேற்சொன் (வெண்)மந்திரத்தை தினம் வெறும் வயிற்றில் பதினோரு முறை இயம்பியதில் அவர் மலச்சிக்கல் நீங்கியதாய் ஒரு செவிவழி செய்தி உண்டு. சரி, மேற்சொன் சூத்திரம் கிரிக்கெட்டில் எவ்வகை உகும். இதை விளக்க நான் ஒரு சராசரி இந்திய மட்டைவிலாச ரசிகனாக உறும கிடவேன். கண்ணம்மாபேட்டை கபாலியானலும் சரி, சப்டர்ஜங்க் குறுக்கு சந்து ஹர்ப்ரீத் சிங் ஆனாலும் சரி, அவனை கிரிக்கெட்டின் பால் காமுற செய்வது மட்டை அடித்தாலே. இதையே சிறுவர்கள் ஓசி காஜி ஆடியபின் "அய்யகோ ! இருட்டிவிட்டது !" என்று ஓடுவதில் காணலாம். இவ்வகை மாண்புகள் பொருந்திய மட்டையடித்தலின் சூட்சமம் என்ன ?
மட்டையாலன் மட்டைகொண்டு பந்து எனும் சூலத்தை திறன் கொண்டு தழுவி ஓட்டத்தை பெறுதல். முல்லை முல்லால் தான் எடுக்க வேண்டும். மேற்சொன் ஹிந்துத்வ வெண்பாவை உறும, யாம் கிரிக்கெட் வெண்பாவை அருளினோம்.
சுழன்று வருமாயதொரு பந்தினையே மட்டையெனும்
உயர் பொருளாம் உயிர்க்கவே கால் பொதித்து
தழுவிடுவார் மட்டைமாந்தர் ஓட்டம் எனும்
பரம்பொருளை எய்து வெல்வார்.
மேற்சொன் கிரிக்கேடோ மந்திரத்தை கவுதம கம்பீரன் தினம் தூக்கத்தில் பிதற்றி இந்திய அணியில் யவ்வகையெனும் புக பெரும் தவம் இருப்பதாய் கிரிகின்போ மையம் கூறுகிறது. மட்டைமனிதன் என்பதை தவிர்த்து மட்டைமாந்தர் என உரைத்து இருபாலர் அபிமானத்தையும் பெற வினவுகிறேன்.
ஆகவே, இந்த இரண்டு சூத்திரங்களையும் ஒப்பு நோக்குகையில் மட்டைமாந்தர் என்னும் உடலும், மட்டை எனும் உயிரும், சரியாக கால்போதி விசையின் சித்தத்தால் ஓட்டம் என்னும் சித்த நிலையை எய்துவர்.சுரங்கச்சொல்லி விளக்குதல் என்னும் ஹனுமன் தோத்திரத்தின் பால் யான் உவகைஉல்லதல் கீழ் வண்ணப்படம் கொண்டு இந்த ஆய்வு கட்டுரை முடிக்கக் கடவேன்.
No comments:
Post a Comment