ப்லோக்போஸ்ட்ல் இதை படித்துகொண்டிருந்த போதுதான் அவன் அவளை முதன் முறையாக பார்த்தான். ஆபீஸ் பஸ்ஸில் தயங்கி தயங்கி ஏறினால். "TCS நியூ ஜாய்னீ . சிறுசேரி ஆபீஸ் போற பஸ் இது தானே. சாரி எனக்கு இன்னும் ID கார்ட் வர்ல. சிறுசேரி ஆபீஸ்ல எந்த பிளாக்ல நிக்கும் ?". டிரைவர் கியர் மாற்றியவாறே சிரித்துகொண்டே சொன்னான் "போய் சீட்ல ஒக்காருமா".
மறுநாள் அவன் தினமும் ஏறும் ஸ்டாப்பிற்கு அவளும் வந்தால். அவள் ஏதேச்சையாக சொன்ன ஹாய்க்கு அவன் பதில் சொல்லவில்லை. மறுநாள் பஸ்ஸிற்கு காத்திருக்கையில் அவளே வந்து கேட்டால் "ஆபீஸ் பஸ் மிஸ் பண்ணிட்டா என்ன பண்ணுவிங்க". அவன் வேண்டா வெறுப்பாக சொன்ன பதிலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. "லீவ் போட்டு வீட்ல படுத்து தூங்குவேன்க."
ஆனால் அவள் விடும்பாடாக இல்லை. மற்றொரு நாள் கேட்டால் "நேத்து இந்தியா தோது போச்சு".
"என்ன சொல்றிங்க"
"நேத்து இந்தியா T20 மேட்ச்ல தொத்துடுசில"
"நான் கிரிக்கெட் பாக்கறது இல்லை"
"ஓ..."
ஒவ்வோர் அழகான பெண்ணும் தன்னை அடையாள படுத்த ஏதுனும் ஒரு செய்கை வைத்திருப்பால். அவளது அழகு குறிப்பாக அவனுக்கு அந்த "ஓ..." அவனுக்கு பட்டது.
கோடை மழை சிறிதாக பெய்து பெரிதாக ஏமாற்றத்தை தரும். அவள் இரண்டு வாரங்களாக பஸ்சில் வராதது அவனுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவனது பஸ் பயணங்கள் பொழுதுபோகாத அந்நியர்கள் எழுதிய ப்ளாக் போஸ்ட் படிப்பதில் மீண்டும் கழிய தொடங்கியது.
எதிர்பாராத நேரத்தில் முதுகில் தட்டியது போன்று அவள் மீண்டும் அன்று பஸ் ஸ்டாப்பிற்கு வந்தால்.
"ரொம்ப நாளா காணும்".
"பஸ்ஸ மிஸ் பண்ணிட்டு வீட்ல படுத்து தூங்கிட்டேன்"
"ஓ ..."
அவளுடுய முத்திரை அழகு குறிப்பை பிம்பம் போல பார்த்ததும் அவளை தாங்க முடியாமல் சிரித்துவிட்டாள்.
"போன மாசம் ஒரு பாய் ப்ரெண்ட் கிடைச்சான். அவன்தான் என்னை டெய்லி ஆபீஸ்ல ட்ராப் பண்ணி பிக்கப் பண்ணிடுருந்தான்.நேத்து பிரேக்அப் ஆயிடுச்சு. அதான் இன்னைக்கு பஸ்ல."
பிக்கப்-ட்ராப் என்ற பாமர வாக்கியத்தின் பொருள் விளக்கத்தை மூன்று வரிகளில்அழகாக சொல்லி முடித்திருந்தால்.
"உங்கிட்ட பைக் இருக்கா ?"
"பெட்ரோல் விலை ஏரிடுச்சுனு வாங்கல "
"ஓ ...".
அந்த சனிக்கிழமை காலை எப்போதும் போல என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்தான். செய்தித்தாளின் முதல் பக்கத்தில் விளம்பரம்.
விளம்பரத்தில் இருந்த ஷோரூம் முகவரியை கவனமாக குறித்து கொண்டான். ஏதோ ஒரு ப்ளாக் போஸ்டில் படித்த வரி நினைவுக்கு வந்தது.
"காதல், வழுக்கி விழுவதை போன்றது. எதிர்பாராத நேரத்தில் விழ வைத்து நம்மை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைக்கும்"