Tuesday, July 29, 2014

THE DAWN OF THE PLANET OF THE APES


THE DAWN OF THE PLANET OF THE APES

{STARRING TEAM INDIA}


DHONI AS CAESAR












Control your emotion. Less emotion more work !













KOHLI AS KOBA






Wait till i get to the top and make you pay for treating me like shit.







RAINA AS MAURICE (close friend and adviser)

















Dude ! When are you going to get me into Test team.








SIR JADDU AS BLUE EYES (CAESAR'S CONFUSED SON)




(Complains to Dhoni)
Boss... that Kohli keeps making pep talks to me in locker room. He even asked to start thinking on my own. I'm confused.





UNMUK CHAND AS  GREY (FOLLOWER OF KOBA)









(Over heard Kohli advicing him...)
What the fuck...Didn't find single wrong report about you in media in last six months ! Buck up Dude. You are supposed to be part of my dream squad.












Note - Ishant Sharma came very close to landing a role. But under performed at last minute to miss out.



(All pun intended)

Monday, July 21, 2014

லார்ட்ஸ்: இந்திய-இங்கிலாந்த் இரண்டாவது டெஸ்ட் - நான்காம் பார்வை


லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு விசேஷ பின்பற்றுதல் உண்டு. அன்றைய ஆட்ட தொடக்கத்தை யாரேனும் ஒரு பெரிய மனுஷர் மணி அடித்து தொடங்கி வைப்பார். நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்தது சாட்ஷாத் நமது கபில்தேவ். இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே ஒரு உற்சாக டானிக்.

விஜய்-தோனி மட்டை ஜோடி களம் இறங்கியது. நேற்றைய தினமே தோனி மயிரியழில் உயிர் தப்பி இருந்தார்.ரொம்ப நேரம் தாக்கு பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்கவில்லை. எதிர்பார்த்தபடியே தட்டி தடவி ஆடி, ஒரு வழியாக சிலிப் கேட்ச் குடுத்து வெளியேறினார். புது பந்தை எடுக்க இன்னும் ஏழு ஓவர் பாக்கி. "முடிஞ்சா எதாவது பண்ணு" என்ற ரீதியில் மொயின் அலிக்கு பந்து வீச பணித்தார் குக். அங்கதான் அவருக்கு அடிச்சுது பம்பர் லாட்டிரி. ஒத்த ரன் கூட அடிக்காத நிலையில் ராஜர் பின்னி "அடிக்கறேண்டா உன்னை பிண்ணி"  என்று அடிக்க போக மிட்-ஆப்ல் கேட்ச். இது அநேகமாக இந்த பயணத்தில் பின்னியின் கடைசி ஆட்டமாக அமையும். I will be happy if Binny proves us wrong !

இந்தியாவை கரையேற்றும் பொறுப்பு முழுவதும் விஜய்-ஜடேஜா ஜோடி மீது விழுந்தது. இருவருமே அக்னி நட்சத்திரம் கார்த்திக்-பிரபு ரீதியில் ஆரம்பித்தனர். ஆம் ! ஜடேஜா அழைத்த ரன்னிற்கு மறுத்த விஜய்; சரமாரியாக விலாச முயன்ற ஜடேஜாவை கண்டித்த விஜய்; இருவருமே வெளிப்டையாக கடுப்பை வெளிக்காட்டினர் ! North meets South ! இன்னைக்கு வெளங்கின மாறி தான் என்று தோன்றியது. அங்க தான் ஒரு அற்புத திருப்பம். இந்த ஜோடி இணைந்து ஆடியது 6 ஓவர்களே ஆனாலும் அதன் பாதிப்பு அதை கடந்தது. விஜய் தனக்கே உரிய நேர்த்தியான ஆட்டத்தை தொடர்ந்தார். மறுபுறம் சரமாரியாக விலாசினார் ஜட்டு. சிரித்த முகமாக இருந்த குக் சற்றே  முறைக்க தொடங்கினார். லார்ட்ஸ் பால்கனியில் இருந்து தோனி சற்றே அமைதி ஆனார். (அவரு என்னைக்கு டென்ஷன் ஆனார்!)

இங்கேதான்  விஜய்யின் பழைய கெட்ட பழக்கம் அவரை வழுக்கிவிட்டது. ஆப் ஸ்டம்ப் வெளியே பாலை தேமேயென நல்ல பிள்ளையாக விட்டுக்கொண்டிருந்தவர் , திடிரென தேவையில்லாமல் மட்டை கொடுத்து மாட்டிக்கொண்டார். துள்ளி குதித்தார் அண்டர்சன் ! லார்ட்ஸ் சதத்தை தவற விட்டார் விஜய் ! A beautifully poised partnership was cut short brutally !

235/7. தலைக்கு மேலே வெள்ளம் போயாச்சு - இனி அதிரடி தான் ஒரே வழி என்று ஆட தொடங்கினார் ஜட்டு. சும்மா சொல்லக்கூடாது  மனிஷன் இங்கிலாந்த் பந்து வீச்சாளர்கள் கண்ணில் விரலை உட்டு ஆட்டிட்டார். உங்கூட்டு அடி எங்கூட்டடி இல்ல - மரண அடி. பிராடை தலைக்கு மேலே ஒரு சாத்து - அண்டர்சன்னை எறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவர் நோக்கி ஒரு மொத்து என்று பிரமாத படுத்தினார். இங்கிலாந்த் அணிக்கு கண்ணில் பொறி தட்டியது. இதனாலேயே என்னோவா, புவனேஸ்வர் குமார் கொடுத்த வாய்ப்பை, சிலிப்பில் அலேக்காக தவற விட்டார் ரூட். இந்தியாவின் அப்போதைய நிலை 246/7. A crucial lapse in the most crucial juncture of the game !

பிராட் புது பந்தை சரியாக பயன்படுத்துகிறாரா என்ற கேள்வி எல்லார் மனதிலும். ஸ்டோக்ஸ் அடிக்கடி ஆடுகளத்திலிருந்து மாயமாக மறைந்தார்.
தெம்பாக தொடர்ந்த இந்திய ஜோடி, இங்கிலாந்த் அணியின் இந்த பிரச்சனைகளை பூதாகாரபடுத்தியது. மூன்றாவது ஆட்டத்திற்கு இதே இங்கிலாந்த் அணி தொடருமா என்பது சந்தேகம் ! விடிவெள்ளியாக பிளாங்கெட் நன்றாகவே பந்து வீசினார். ஜட்டு அரை சதத்தை 42 பந்துகளில் அடித்து தூள் செய்தார். மறுமுனையில் குமார் சூடுபிடிக்க, இந்தியாவின் லீட் 300ஐ தாண்டியது. Mission accomplished for India !

இங்கிலாந்தை நொந்து நூடில்ஸ் ஆக்கிய பின்னர் ஜட்டு 68 ரன்னிற்கு அவுட். Perhaps the finest innings of Jaddu's career so far ! கலக்கிட்டீங்க சர் ஜட்டு. திரும்பி பார்பதற்குள் குமாரும் 50 அடித்திருந்தார். ஒரு வழியாக 318 ரன் முன்னிலையில் ஆட்டம் இழந்தது இந்தியா. அழகிய எண் விளையாட்டு - இங்கிலாந்த் முதல் இன்னிங்க்சில் எடுத்த ரன்கள் 319.

150 ஓவர்களில் - 319 ரன்கள் இலக்கு - 2.2 ஓவருக்கு/ரன் சராசரி - அப்பப்போ எகுரும் பந்து - 5ஆம் நாள் ஆட்டத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - குமாரின் பந்து வீச்சை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா - கடைசி ஆள் வரை திறமையான மட்டையாலர்கள் - வெற்றி யார் பக்கம் - Looks like a very complex equation என்று சுவாரஸ்யமாக தொடங்கியது நான்காம் இன்னிங்க்ஸ்.

இங்கிலாந்தின் முதல் இலக்கு - 8 ஓவர் - தேநீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல்இருப்பது. குமார்-ஷாமி பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. 6வது ஓவர் புது பந்தில் வீச வந்தார் ஜட்டு. முதல் பந்து - நேராக ஆப் ஸ்டம்ப் நோக்கி - Padஐ துருத்தி ஆடிய ராபின்சன் தனக்கே பாடை கட்டிக் கொண்டார். LBW - 12/1.

தேநீர் இடைவேளைக்கு பின் ஜட்டுவின் சுழல் பந்தை ஆட ரொம்பவே தடுமாறினர். ஆனால் சீக்கரமே சுதாரித்து கொண்டது குக்-பாலன்ஸ் ஜோடி. இஷாந்த் ஷர்மா ஒரு சில லட்டு பால்கலை போட்டு அவர்களை ஆசுவாசபடுத்தினார். தோனியின் எந்த பாச்சாவும் பலிக்கவில்லை - 50 ரன்களை தொட்டது இங்கிலாந்த். குக் நன்றாகவே ஆடத் தொடங்கினார். கடைசியாக மனம் வந்த தோனி,  செல்லபிள்ளை ஜட்டுவிடமிருந்து பாலை பிடுங்கி ஷாமிக்கு  குடுத்தார். கை மேல் பலன். முதல் பந்திலேயே பாலன்ஸ், வெளியே போன பந்தை நக்கி அவுட் ஆனார். (தமிழில் nick என்பதற்கு நக்குதல் பொருத்தமான வார்த்தை தானே ?). இதோ வந்துட்டேன் என்று சிலிர்த்தெழுந்த இஷாந்த் லாவகமாக பந்தை உள்ளே கொண்டு வர ஆப் ஸ்டம்ப் இழந்தார் பெல். அரௌண்ட் விக்கெட் வந்து ஆப் ஸ்டம்பில் குத்தி நேராக்கிய பந்தை சமாளிக்க முடியாமல் வெளியேறினார் குக். 72/4.சொற்ப ஓவர்களை ரூட்-மொயின் அலி ஜோடி ஒரு வழியாக ஆடி முடித்து.105/4.

இங்கிலாந்த் 5ஆம் நாள் ஆட்டத்தில் தப்பிப் பிழைப்பது தெய்வாதீனம் ! வருண பகவான் கை குடுக்கலாம். கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா வென்றது 1986ல். அந்த மாட்சில் ஆட்ட நாயகன் கபில்தேவ். அந்த கபில்தேவ் மணி அடித்த நேரம் இந்தியா லார்ட்சில் அடுத்த வெற்றியை எட்டும் என்றே தோன்றுகிறது.

கடைசியில் அதிங்கபிரசங்கி தனமாக இந்த பாட்டை இந்திய அணிக்கு அர்பணிக்கிறேன் !


Wednesday, April 2, 2014

போ இன்று நீயாக



"மழை எப்பொழுது பொழியுமென்று தெரியாது.ஆனால் எதிர்பாராத நேரத்தில் பெய்து குளிர்விக்கும்.காதலும் அது போன்றுதான்.எப்பொழுது நிகழும் என்று தெரியாது.ஆனால் எதிர்பாராத நேரத்தில் பெய்து உனை ஆச்சர்யபடுத்தும் ! "

ப்லோக்போஸ்ட்ல்  இதை படித்துகொண்டிருந்த போதுதான் அவன் அவளை முதன் முறையாக பார்த்தான். ஆபீஸ் பஸ்ஸில் தயங்கி தயங்கி ஏறினால். "TCS  நியூ ஜாய்னீ . சிறுசேரி ஆபீஸ் போற பஸ் இது தானே. சாரி எனக்கு இன்னும் ID  கார்ட் வர்ல. சிறுசேரி ஆபீஸ்ல எந்த பிளாக்ல நிக்கும் ?". டிரைவர் கியர் மாற்றியவாறே சிரித்துகொண்டே சொன்னான் "போய் சீட்ல ஒக்காருமா".

மறுநாள் அவன் தினமும் ஏறும் ஸ்டாப்பிற்கு அவளும் வந்தால். அவள் ஏதேச்சையாக சொன்ன ஹாய்க்கு அவன் பதில் சொல்லவில்லை. மறுநாள் பஸ்ஸிற்கு  காத்திருக்கையில் அவளே வந்து கேட்டால் "ஆபீஸ் பஸ் மிஸ் பண்ணிட்டா என்ன பண்ணுவிங்க". அவன் வேண்டா வெறுப்பாக சொன்ன பதிலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. "லீவ் போட்டு வீட்ல படுத்து தூங்குவேன்க."

ஆனால் அவள் விடும்பாடாக  இல்லை. மற்றொரு நாள் கேட்டால் "நேத்து இந்தியா தோது போச்சு".

 "என்ன சொல்றிங்க"

"நேத்து இந்தியா T20 மேட்ச்ல தொத்துடுசில"

 "நான் கிரிக்கெட் பாக்கறது இல்லை"

 "ஓ..."

ஒவ்வோர் அழகான பெண்ணும் தன்னை அடையாள படுத்த ஏதுனும் ஒரு செய்கை வைத்திருப்பால். அவளது அழகு குறிப்பாக அவனுக்கு அந்த "ஓ..." அவனுக்கு பட்டது.

கோடை மழை சிறிதாக பெய்து பெரிதாக ஏமாற்றத்தை தரும். அவள் இரண்டு வாரங்களாக பஸ்சில் வராதது அவனுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவனது  பஸ் பயணங்கள் பொழுதுபோகாத அந்நியர்கள் எழுதிய ப்ளாக் போஸ்ட் படிப்பதில் மீண்டும் கழிய தொடங்கியது.

எதிர்பாராத நேரத்தில் முதுகில் தட்டியது போன்று அவள் மீண்டும் அன்று பஸ் ஸ்டாப்பிற்கு  வந்தால்.

"ரொம்ப நாளா காணும்". 

"பஸ்ஸ மிஸ் பண்ணிட்டு வீட்ல படுத்து தூங்கிட்டேன்"
"ஓ ..."

அவளுடுய முத்திரை அழகு குறிப்பை பிம்பம் போல பார்த்ததும் அவளை தாங்க முடியாமல் சிரித்துவிட்டாள்.

"போன மாசம் ஒரு பாய் ப்ரெண்ட் கிடைச்சான். அவன்தான்  என்னை டெய்லி ஆபீஸ்ல ட்ராப் பண்ணி பிக்கப் பண்ணிடுருந்தான்.நேத்து பிரேக்அப்  ஆயிடுச்சு. அதான்  இன்னைக்கு பஸ்ல."

பிக்கப்-ட்ராப்  என்ற பாமர வாக்கியத்தின் பொருள் விளக்கத்தை மூன்று வரிகளில்அழகாக சொல்லி முடித்திருந்தால்.

"உங்கிட்ட பைக் இருக்கா ?"

"பெட்ரோல் விலை ஏரிடுச்சுனு வாங்கல "

"ஓ ...".

அந்த சனிக்கிழமை காலை எப்போதும் போல என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்தான். செய்தித்தாளின் முதல் பக்கத்தில் விளம்பரம்.

 


விளம்பரத்தில் இருந்த ஷோரூம் முகவரியை கவனமாக குறித்து கொண்டான். ஏதோ ஒரு ப்ளாக் போஸ்டில் படித்த வரி நினைவுக்கு வந்தது.

"காதல், வழுக்கி விழுவதை  போன்றது. எதிர்பாராத நேரத்தில் விழ வைத்து நம்மை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைக்கும்" 

Saturday, March 29, 2014

பதினெட்டாம் கொலை



பயம் ! மனிதனுக்கு படைக்கப்பட்ட முக்கியமான உளவியல் கூறு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொலைகாரன்,காமுகன்,இனவெறியன் ஒளிந்திருக்கிறான். பயம் என்ற உளவியல் போர்வை விலகும் பொழுது அவன் வெளிப்படுகிறான். பயம் இல்லா உலகம் கொடும்பாவிகள் உலவும் நந்தவனமாக மாறும்.இந்த சித்தாந்தங்களை யோசிக்கவோ,போதிக்கவோ நான் ஒன்றும்  ஞானி அன்று. இதுவரை பதினேழு கொலைகள் செய்த சாதாரண நந்தவனத்தில் உலவும் ஒரு கொடும்பாவி. 

"எல்லாம் ரெடியா ?"

"பக்கா ப்லான்னிங்கு. எட்டற மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு கெலம்புவன். ஒம்போது மணிவாக்ள தேனாம்பேட்டை சிக்னல் தாண்டி டீ கடை. டெய்லி நிப்பாட்டி தம் போடுவான். ஊர்கதை உலககதைனு அரைமணி  நேரமாவது  பேசுவான். நம்ம பய அதுக்குள்ள பைக்ல பெட்ரோல எடுத்துறுவான்."

"பார்ட்டி உசாரு ! சந்தேகம் வராம பண்ணனும்."

"அத பத்தி நீ கவலை படாத. நம்ம பையன் சம உசாரு. வண்டில வண்ணன்தோப்பு முக்கு வரைக்கும் போறதுக்கு பெட்ரோல் இருக்கும். அங்க வெச்சு நீ அவன போட்ரு."

கூலிக் கொலையாளிகள் கூட்டத்தில் இரண்டு விதமான நுட்பங்கள் தேவை. ஒன்று - ஒரு நபரை தொடர்ந்து சென்று அவரை கவனித்தால்,அவரது பலவினங்கள் அளவிடுதல், கொலை செய்ய சரியான இடம்,பொருள்,ஏவல்  ஆகியன திட்டமிடுதல். இதற்கு சிறிது புத்தி கூர்மையும் நிதானமும்
தேவைபடுகிறது. ஆனால் இறுதியான 'கொலை' என்ற உச்சகட்ட வன்ம செயலுக்கு மிகபெரிய ஒரு முட்டாள் தனம் தேவை. அதனால்தானோ என்னவோ இன்றுவறையில் கொலை செய்வதற்கு எனக்கு சொற்ப பணமே தரப்படுகிறது 

"பார்ட்டிக்கு எவ்ளோ வயசு இருக்கும்." என் கையில் ஒரு போட்டோவை கொடுத்துவிட்டு நகர்ந்தான். அதில் சுமார் நாற்பது வயது ஒத்த  ஒரு சாமானியன் சிரித்து  கொண்டிருந்தான்.

அன்று தனது சராசரி அரை மணிநேரம் தாண்டியும் யாருடனோ எதையோ சுவாரஸ்யமாக பேசிகொண்டிருந்தான். கடைசியாக தெரு நாய்க்கு ஒரு பிஸ்கட் துண்டை வீசி விட்டு பைக்கை செலுத்தினான். நானும் சிறிது தொலைவில் பைக்கை பின்தொடர்ந்தேன். வண்ணாந்தோப்பு  சந்து நெருங்கியது. இங்கு எங்கேனும் தான் வண்டி பெட்ரோல் வற்றி நிற்கவேண்டும். பைக் நிதானமான வேகத்தில் சென்று கொண்டே இருண்டது. அவன் வீடு சேரும் வரை.

"பைக்க லேம்ப் போஸ்ட் கீழ நிப்பாட்டி இருக்கான் . வண்டிய அங்க வெச்சு தொடறது  ரிஸ்க்குன்னு பையன்  திரும்ப வந்திட்டான். உடு! இன்னைக்கு இல்லேனா  நாளைக்கு சிக்கிடுவான். நீ ஆபீசிக்கு போய்  உன் அமௌண்ட வாங்கிக்க. அப்பரும்  கூப்பிடறேன்" செல்போன் குரல் 
அமைதயுற்றது. 

திரும்பி செல்கையில் எதிர்பாராமல் வண்டி நகர மறுத்து நின்றது. தூரத்தில் யாரோ நடந்து வருவது தெரிந்தது. அருகில் வந்தபோது தெரிந்தது - போடோவில் பார்த்த நாற்பது வயது சாமான்யன். லுங்கிக்கு மாறியிருந்தார். பேண்டில் மறைத்திருந்த தொப்பை, லுங்கியில் மறைய மறுத்து வெளிப்பட்டது. 

"என்ன தம்பி. வண்டில பெட்ரோல் இல்லையா."

மெளனமாக அவரை பார்த்தேன்.

"நைட்ல இந்த ஏரியால பங்க் எதுவும் தொரந்திருக்காதே.ஒண்ணு  பண்ணுங்க. நம்ம வீடு இங்கேர்ந்து பக்கம் தான். வண்டிய இங்கயே போட்டு  வாங்க. வீட்ல நம்ம வண்டி நிக்குது. அதல பெட்ரோல் எடுத்து பாட்டில்ல புடிச்சுகோங்க ."

இருவரும் வீடு நோக்கி நடக்கையில் கேட்டார் "தம்பிக்கு என்ன வேலை ".


Thursday, March 13, 2014

Czechoslovakia காதல்


நாம எவ்ளோவோ மூஞ்சிகள பாக்கறோம். அழு மூஞ்சி,கோண மூக்கு மூஞ்சி, கண்ணாடி போட்ட மூஞ்சி,சுமார்  மூஞ்சினு. ஆனா அழகான மூஞ்சினா  அதாங்க. பாத்த first வாட்டியே மிடில் ஸ்டம்ப் கிளீன் போல்டு.

"டேய் நாயே ! நடு ரோட்ல நின்னு கனவு கண்டுகினு இருக்கியா . வண்டிய எட்றா !"

நம்ம ஏதோ ஒரு பீலிங்க்ல இருக்கும் போது உள்ள பூந்து நாஸ்தி பண்றதுக்கே சில நாய்ங்க வாரும்.   அவன திரும்பி பாத்து மாமூலான மொரப்ப காமிச்சிட்டு , "வண்டிய எடுபோம்ல . என்ன அவசொரம் !". வண்டிய எடுத்தேன்.

அந்த டி கடேல தம்மு வாங்கிட்டு கதைய கண்டிநியு பண்றேன்...

 Czechoslovakia. படிக்கவே எவ்ளோ கஷ்டமா இருக்குல. மொதோவாட்டி கேட்டப்போ சத்தியமா அந்த ஊரு எங்க இருக்குனே தெர்லேனேன் . பொறுமையா  அவங்க ஊர் பத்தி சொன்னங்க . எனகொன்னும் மண்டெல ஏர்ல . ஆனா ஒரு விஷ்யம் மட்டும் தெளிவா புரிஞ்சிச்சு. அவங்க ஊர்ல பிகர் கூட்டம் அள்ளும் .  ஏன்னா , நம்மாளு அவ்ளோ அலகு.

மொதோ தம்மு முடிய முடிய அடுத்தத பத்த வைக்கணும். அப்பதான் ஒரு ப்லொவ் வரும். "பாஸ்... லைட்டர்  இருக்கா."

என்னா ரசனயான பொண்ணுப்பா. நாம ஊரு டி கடையில அவ்ளோ ரசனைய யாரும் டி குடிச்சு நான் பாத்தது இல்ல.வாழ்கைய இஞ்சு இஞ்சா ரசிப்பா. ஒரு நாள் கேட்டேன்,"உங்க ஊர்ல இதுலாம் இல்லையா.எத பாத்தாலும் ஓவரா பீல் பண்ற ".

ஏதோ ஒண்ணு இங்கிலிஷ்ல சொன்னா. கூட்டி கொறச்சு பாத்தா அதோட தமிழ் translation ," எங்க ஊர்ல நீ இல்லையே !".

மூணு மாசம் ஒடிச்சு. ப்ரெண்ட்ஷிபா,லவ்வா  என்ன எழவுன்னெ தெரியாம ஒடிச்சு. திடிர்னு ஒரு நாள், "Come with me to my county"னா.

ஹோட்டல்ல ஒரு வடைக்கு மட்டும் டோக்கன் வாங்கிட்டு ஒக்காரும் போது, சர்வர் எவனுக்கோ போக வேண்டிய காப்பிய நம்ம டேபிள்ல வெச்சதும் கூச்ச படாம குடிச்சிட்டு வர கோஷ்டி  தான். இருந்தாலும் மனசு ஏதோ சொல்லிச்சு. உனுக்கு இந்த தேனாம்பேட்ட தான் சரின்னு."Madam ! No ! Me happy only in Tenampet ! Me no coming !"

அவ ஊருக்கு போற வரைக்கும் அத பத்தி பேசவே இல்ல. ஆனா ஏர்போர்ட்ல வெச்சு தாங்க முடியாம கேட்டேபுட்டேன், " Can I kiss you !".

ஒரு அஞ்சு செகண்ட் அவ ஒண்ணுமே சொல்லல. அப்பரும் என்ன நெனச்சலோ தெரியல. அடிச்சா பாருங்க ஒரு லிப் கிஸ்ஸு ! சாமி !

ஆறு மாசம் அப்டியே சுத்திகிட்டு இருந்தேன்.  அப்பப்ப தோணும். அவ கூட அவ ஊருக்கே போயிருகனும்னு.  ஒவ்வரு நாலும்  தூங்க கண்ண  மூடும் போதும் அவ மூஞ்சு கண்ல வரும்.

எவ்ளோ நாள் தான் அப்டியே இருக்கறது. வீட்ல ஒரு பொண்ணு பாத்தாங்க. எல்லாமே கட கடன்னு முடிஞ்சிடிச்சு. பர்ஸ்ட்  நைட் - பிரண்ட்ஸ்லாம் பயங்கரமா பச்சை பச்சையா கலாய்கறாங்க. ஆனா எனக்கு மட்டும் ஏதோ ஒரு மாதிரி இருந்திச்சு. கவித தெரிஞ்ச பிரண்டு ஒருத்தர் சொன்னாரு, " உதடுகள் பிரிந்தாலும், எச்சில் இன்னும் காயவில்லை".

எப்டி சொன்னேன்லாம் ஞாபகம் இல்ல. ஆனா அன்னைக்கே ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த கதைய அப்டியெ  detail மாறாம அவள்ட சொல்லிட்டேன். என்ன சொல்லுவாலோனு கீழ குனிஞ்சு உக்காந்திருந்தேன்.

அவ ரொம்ப சிம்ப்ளா,
 "நாளைக்கு காலைல பேசிக்கலாமா" னு படுத்து தூங்கிட்டா.

எப்டி எப்டியோ react பண்ணுவான்னு யோசிச்சேன். ஆனா இப்டி ஒரு reaction சத்தியமா யோசிக்கல.

பாத்திங்களா. என் கதைய  சொல்ல சொல்ல அந்த தேனம்பேட்ட சிக்னல்ல ஏன் நின்னுகிட்டு இருந்தேன்னு சொல்ல மறன்டேன். ஒன்ற வரசத்துக்கு  அப்புறம் நம்ம madam ஊருக்கு வந்திருக்காங்க. எப்டியோ நம்ம phone  number கண்டுபுட்ச்சி பேசிச்சு. என்னனமோ பேசிச்சு. கடைசியா, "I want to see you" னுச்சு.

பாக்கறதுக்கு மேடம் இன்னும் அப்டியேதான் இருந்தாங்க. நான் தான் ரொம்ப கருத்து போய்டேன்னு பீல் பண்ணாங்க. கலம்பர நேரத்தல கேட்டாங்க,"Can I kiss you ".

யோசிக்காம சொன்னேன், "No madam. I marry man. One life. one wife.போனா  வாட்டி அடிச்சா கிஸ் ஈரமே இன்னும் காயல...

...அப்புறோம் ... இனிமே  சென்னை வந்திங்கனா தயவு எனக்கு செஞ்சி என்ன பாக்கதீங்க. Happy Journey."

போடாங்க முட்டா டேஷ்னு நீங்க சொல்றது காதுல உழுவுது. ஆனா என்னவோங்க. இந்த மனசு சொல்லுது. இந்த தேனம்பேட்ட தான் நமக்கு சரின்னு.

இந்த பீலிங்கோட தான் சிக்னல்ல நின்னுட்டு இருந்தேன். அந்த பாடு ஹோர்ன் அடிச்சு காண்டு பண்ணிட்டான். விடுங்க. அவனுக்கு என்ன பீலிங்கோ !

அன்னக்கி first  night கு அப்றோம்  நம்ம wife  மேல ஒரு பயங்கரமான லவ் வந்திருச்சுங்க. காலைல எந்திருச்சு பாக்கும் போது ரூம்ல அவங்க இல்ல. வெளிய வந்தா வீட்ல எல்லாரும் அழுதிட்டு இருக்காங்க. அன்னைக்கு சாயங்காலம் வக்கீல் நோட்டீஸ் வந்துச்சு. டைவோர்ஸ் கேட்டு. ஆனா சத்தியமா அவங்க மேல கோவம் வர்லேங்க. பாஸ்... லவ் பண்றவங்க மேல எப்டி பாஸ் கோவம் வரும்.

ஒரு வருஷமா அவங்க என்ன புரிஞ்சு பாங்கனு வெயிட் பண்றேன். புரிஞ்சுபாங்க. என்ன கொஞ்சம் லேட் ஆவுது. அவ்ளோ தான். எல்லோரும் பொண்டாட்டிய பர்ஸ்ல போட்டாவா வெச்சு லவ் பண்றான். நான் மனசுல வெச்சி லவ் பண்றேன் பாஸ் ...


Sunday, March 31, 2013

என்னவள் அழகோவியம்



என்னவள் அழகோவியம் !

வரைந்தேன் பொடி கோலமாய்
அய்யகோ ! அழித்தது காற்று !

வரைந்தேன் மாக்கோலமாய்
பொய்யென பெய்தது மழை !

தகாது இந்த சோகம்
வரைந்தேன் என்னவளை
என் மனம் யெனும் பாறையில் !

அய்யகோ ! அவள் கடைக்கண் பார்வையில்
என் மனப்பாறையும்  உருகிற்றே !

ஆன்மாவின் புலம்பல்


உள்ளாடை வாங்கச் சென்றோம்
என்ன நிறத்தில் வேண்டுமய்யா ?
வெள்ளை தவிர்த்திடுங்கள் கறைபடும்
உறைத்தான் என் நண்பன்;

அதோ சாலையில் அங்கோர் போராட்டம்
அருகியதில் விளங்கியது
ரத்த பூமியில் உழலும் தமிழர்க்கு
பொங்கி எழுந்த எம்தமிழர்
வா நண்பா தோள் கொடுப்போம் என்றேன்
தோலை உரித்திடுவான் காவலன்
ஏன் வம்பு விலகி நில்
எட்டி நடந்தோம் சாலையில் ;

உள்ளாடையில் கறை தவிர்க்க நினைத்தீர்
மனக்கறை அகற்றல் என்றோ !
ஆன்மாவின் புலம்பல் !

Pages